உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பு!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
80 பார்வைகள்

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க காங்கிரஸைக் கட்டுப்படுத்தப்போகும் அரசியல் கட்சி எது என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக இது கருதப்படுகிறது.

புளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, தற்போது நாளொன்றுக்கு 40 இலட்சம் முதல் 50 இலட்சம் வரையான மக்கள் முன்கூட்டியே வாக்களித்து வருகின்றனர்.

கடந்த பல தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை முன்கூட்டிய வாக்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, டெக்சாஸ் மாநிலத்தில் வாக்களிப்பு அதிகரித்துள்ளதுடன், இதுவரை 58 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

இது 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைவிட சுமார் 17.5 இலட்சம் அதிகமாகும்.

இம்முறை அமெரிக்க செனட் சபையின் கட்டுப்பாட்டைத் தீர்மானிப்பதில் டெக்சாஸ் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செய்தியாளரை உருவக்கேலி செய்த ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செய்தியாளர் ஒருவரை ‘அருவருப்பானவர்’ எனக் குறிப்பிட்டு, அவரது உடல் தோற்றம் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். தென் கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்…

89 0 0
உலக செய்திகள்

போஸ்னியாவில் உலங்கு வானூர்தி விபத்து – 4 படை வீரர்கள் உயி@ரிழப்பு

போஸ்னியாவின் வடக்குப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 4 படை வீரர்கள் உயிரிழந்ததுடன் மேலும்…

85 0 0
உலக செய்திகள்

யூத-அரபு கூட்டணி ஆட்சி அமைக்க வலியுறுத்தி இஸ்ரேலிய இடதுசாரி ஆர்வலர்கள் போராட்டம்!

இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவரும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முக்கிய அரசியல் போட்டியாளருமான காடி ஐசென்காட்டின் (Gadi Eisenkot) வீட்டிற்கு வெளியே இடதுசாரி ஆர்வலர்கள் திரண்டு தீவிரப் போராட்டத்தில்…

87 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! ஆட்சியைத் தக்கவைக்கிறாரா நெதன்யாகு?

இஸ்ரேல் தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் தெளிவான வெற்றி கிடைக்காத நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து இடைக்காலப் பிரதமராகச் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நெதன்யாகு…

90 0 0