உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சென் பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்ற விஞ்ஞான – வர்த்தக தினம்.!

இலங்கை செய்திகள் 58 நிமிடங்கள் முன்
69 பார்வைகள்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாணவர்களின் விஞ்ஞான- வர்த்தக தின நிகழ்வுகள் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11:00 மணியளவில் கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் அருட்தந்தை A.P. திருமகன் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட விஞ்ஞான வினா – விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தால் வருடா வருடம் வெளியிடப்படும் “பரிணாமம்” இதழ் -7 வெளியீடும் இடம்பெற்றதோடு வணிக மாணவர் மன்றத்தால் உயர்தரப் பிரிவு வணிக மாணவர்களுக்கான எதிர்பார்க்கை வினா – விடைக்களுடன் கூடிய வினாவிடைத் தொகுப்பு நூல் வெளியீடும் , ” இன்றைய தொழிநுட்ப பெரும் புரட்சியுக போக்கின் அடிப்படையில் எதிர்கால உலகை முற்போக்குடன் வழி நடத்த வல்லது விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களா?அல்லது வணிக முதலீடுகளா? ” எனுன் தலைப்பில்
மாணவர்களின் பட்டிமன்ற நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிகபீடப் பேராசிரியர் S.ரஜுமேஷ் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சமுர்த்தி மகா சங்க பிரதி முகாமையாளரும் யாழ்ப்பாண கம்பன் கழக செயலாளருமான சொல்லருவி T.கருணாகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அயற் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெயர்ப்பலகைகள் தெளிவின்மை; ஊர்களின் பெயர்களை வாசிக்கத் திணறும் பயணிகள்.!

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் நடப்பட்டுள்ள ஊர்களின் பெயர்களைத் தாங்கிய விளம்பரப் பலகைகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், வீதிகளில் பிரயாணம் செய்வோர் இலகுவாக…

74 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

மன்னார் நகரப் பகுதியில் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட…

79 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு நினைவுகூறல்.!

வடக்கு முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பின் 36 ஆவது வருட நினைவுகூறல் நிகழ்வும், சிறப்பு ஊடகவியலாளர் மாநாடும் இன்று (30)…

81 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படும் பேருந்து நிலையம்; அதிகாரிகள் அசமந்தம்.!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பிரதான பேருந்து நிலையம், தற்போது பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாரிய…

68 0 0