உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஒபரேசன் சிந்தூருக்கு பின் முதன் முறையாக, பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

இந்திய செய்திகள் 1 மணி நேரம் முன்
75 பார்வைகள்

ஒப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியத் தலைநகர் டெல்லியில் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கடந்த 20 ஆம் திகதி வெளியிட்ட இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நடப்பாண்டின் இறுதியில் முதன்முறையாக நடத்தப்படும் “நாகரிகப் பேச்சுகளுக்கான கருத்தரங்கில்” (Civilisational Dialogue) அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த கருத்தரங்கில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் உட்பட 10 உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாசார அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சிக்கு (Aurangzeb Khan Khichi) இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், பலதரப்பு நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்கான அழைப்புக்கும், பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என இந்திய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் கோவாவில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிலேயே பாகிஸ்தான் இறுதியாகப் பங்கேற்றிருந்தது.

கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் பதற்றம் நிலவியது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 4 நாட்களுக்கு ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியத் தரப்பினால் தீவிர இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எல்லை கடந்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில், அண்மையில் தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில், பாகிஸ்தான் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான இஷாக் தார் முன்னிலையிலேயே பயங்கரவாத ஒழிப்பு குறித்துப் பேசிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பாகிஸ்தானை நேரடியாக விமரிசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்! ஐவர் ப@லி

வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவை நோக்கி நகர்ந்த ‘அர்னாப்’ புயலின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதிகாலை வேளையில் ஆந்திரப் பிரதேச…

79 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது!

முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று 29) சென்னை தலைமை செயலகத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக்…

68 0 0
இந்திய செய்திகள்

கரூரில் குறிவைக்கப்பட்ட விஜய் – முக்கிய நபருக்கு வலைவீச்சு

தமிழகத்தில் தனியார் பாடசாலை நிர்வாகிகளுக்கு அரச அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது…

90 0 0
இந்திய செய்திகள்

அருணாச்சல பிரதேச எல்லையில் தொடரும் பதற்றம்!

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில், சீன இராணுவத்தினருடன் இந்தியப் படையினர் தொடர்ந்து பல்வேறு மோதல் நிலைகளை எதிர்கொண்டு வருவதாக, இந்திய- திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை…

88 0 0