உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணி கூட்டுப் புதைகுழி விவகாரம்; சர்வதேச உதவியைப் பெற வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

யாழ்ப்பாணம், செம்மணி கூட்டுப் புதைகுழி விவகாரத்தில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகளை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச உதவியைப் பெற வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்தப் பரிந்துரைத் தகவலைப் பகிரங்கப்படுத்தினார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டதாவது,
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை உறுதிப்படுத்தவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தேவையான அவசியமான நடவடிக்கைகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான பணியாகும். அதனை நாங்கள் இடைவிடாது செய்து வருகின்றோம்.

செம்மணிப் புதைகுழி போன்ற விவகாரங்களில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து, மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் மக்களுக்கு அதிகபட்ச நீதியைப் பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

குறிப்பாகச் செம்மணிப் புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தவரை, இலங்கை அரசு சர்வதேச உதவியைப் பெற வேண்டும் என்று நாங்கள் ஆணைக்குழுவின் சார்பில் தெளிவாகப் பரிந்துரைத்துள்ளோம். எம்மால் முன்வைக்கப்படும் இந்தப் பரிந்துரைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்திச் செயற்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் அரசையே சாரும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பேரிடர்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் பொறுப்பு.!

பேரிடரின்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் அவ்வாறான பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி…

60 0 0
இலங்கை செய்திகள்

கடற்றொழில் துறையின் செயல்திறனை மேம்படுத்த 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்.!

இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் வள முகாமைத்துவத்தை மேலும் நிலையானதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில், கள உத்தியோகத்தர்களுக்காக 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான…

65 0 0
இலங்கை செய்திகள்

மலையகத்தின் ஒப்பற்ற பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27 ஆவது சிரார்த்த தின நிகழ்வு!

மலையக மக்களின் ஒப்பற்ற பெருந்தலைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவனத் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27 ஆவது சிரார்த்த தினம் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உணர்வுபூர்வமாக…

74 0 0
இலங்கை செய்திகள்

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அரசு! : சஜித் குற்றச்சாட்டு!

அரசால் கொண்டுவரப்படவுள்ள அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிற்சங்கங்களுடனான விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.…

71 0 0