உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வட மாகாண முஸ்லிம்களின் 36 ஆம் ஆண்டு ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவேந்தல் நிகழ்வு!  

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
75 பார்வைகள்

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பின் 36 ஆம் ஆண்டு ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவேந்தல் நிகழ்வு இன்று (30) வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் ஹாமீம் கல்வி நிலையத்தில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமான இந்நினைவேந்தல் நிகழ்வு, யாழ் சகோதரத்துவ அமைப்பின் ஸரபுல் அனான் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வடமாகாணத்திலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் தமது பூர்வீக சொந்த இடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். யாழ் முஸ்லிம்களின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு, கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த இனச்சுத்திகரிப்பின் துயர வடுவிற்கு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இன்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் வெளியேற்றத்தின் போது நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வரலாற்றுத் துயரை நினைவுகூர்ந்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக   பிரான்சில் வசிக்கும் சமூகச் செயற்பாட்டாளர் அமீன் ஆஷிக்,ஊடகவியலாளரும் ஆய்வாளரும் தோழர் ஸ்டாலின் முன்னாள் யாழ் மாநகர சபை இலங்கைத் தமிழரசுத் கட்சி உறுப்பினர் நிபாஹிர் ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் தோழர் கமல், தோழர் ஜீவன்  தொழிலதிபர் சகோதரர் தாஹிர் எக்ஸத் ஊடகப் பிரிவின் முக்கியஸ்தர்கள் மற்றும் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

வரலாற்றுத் துயரினை நினைவுகூர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் கருத்துரைகள் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பப் பெற முடியாது!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டவுடன் அதைத் திரும்பப் பெற முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்…

71 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக…

77 0 0
இலங்கை செய்திகள்

பேரிடர்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் பொறுப்பு.!

பேரிடரின்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் அவ்வாறான பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி…

81 0 0
இலங்கை செய்திகள்

கடற்றொழில் துறையின் செயல்திறனை மேம்படுத்த 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்.!

இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் வள முகாமைத்துவத்தை மேலும் நிலையானதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில், கள உத்தியோகத்தர்களுக்காக 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான…

72 0 0