சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அரசு! : சஜித் குற்றச்சாட்டு!
அரசால் கொண்டுவரப்படவுள்ள அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிற்சங்கங்களுடனான விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்களும், ஒட்டுமொத்த நாட்டையும் ஒரேயொரு அரசியல் கட்சிக்கு அடிபணியச் செய்து 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வெட்கக்கேடான நடவடிக்கையாகும்.
கம்போடியாவின் கொடூர ஆட்சித் தலைவரான போல் பொட்டின் ஆட்சியை எமது நாட்டிலும் முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இந்தச் சட்டமூலங்களைக் கொண்டு வருகின்றது.
இதற்கு முன்னர் துப்பாக்கிப் பிரயோகங்கள், தடியடிகள் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறைகளை, இன்று சட்டப் புத்தகங்களுக்குள் உள்வாங்கிச் சட்டபூர்வமாக முன்னெடுக்கப் பார்க்கின்றனர். பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக வழியிலும் மக்கள் பலத்துடனும் இதனைத் தோற்கடிப்போம்.” – என்றார்.
புதிய சட்டமூலங்களின் ஆபத்துகள் குறித்து மேலும் விளக்கிய சஜித் பிரேமதாஸ,
“இந்தச் சட்டங்களின் ஊடாகச் சுதந்திரமான நீதிமன்றங்களின் அதிகாரங்கள் கூடக் கேவலப்படுத்தப்படுகின்றன. நீதிமன்றத்துக்குரிய அதிகாரங்களைப் பறித்து நிறைவேற்று அதிகாரத்திடம் ஒப்படைப்பதுடன், ‘பயங்கரவாதி யார்’ என்பதை வரைவிலக்கணப்படுத்தும் அதிகாரமும் நிறைவேற்று அதிகாரத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு எதிரான மாற்றுக்கருத்துடைய தரப்பினரைப் பயங்கரவாதிகளாக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
தேர்தல் காலத்தில் ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிச் சர்வதேச ஜனநாயக நியமங்களுக்கு அமைவான சட்டமே கொண்டுவரப்படும்’ எனக் கூறிய அநுர அரசு, இன்று பழைய சட்டத்தை விடப் பாரதூரமான அடக்குமுறைச் சட்டங்களை அறிமுகப்படுத்துகின்றது.
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என வாக்குறுதியளித்த ஆட்சியாளர்கள், 220 இலட்சம் மக்களையும் நிர்கதியில் தள்ளி






