உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பல குடும்பங்கள் பாதிப்பு; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நேரடி விஜயம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
80 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டிக்கொட்டு பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டோர் இன்று திங்கட்கிழமை (26) மாலை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, சேதமடைந்த வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாக தறப்பால்கள் வழங்கிவைக்கப்பட்டது.

முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று ஒழுங்குகளும் செய்து வைக்கப்பட்டது.

குறித்த விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரஜாசக்தி உறுப்பினர்களும் சேதமடைந்த பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு உட்பட உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒரு வயது ஆண் குழந்தை உ**யிரிழப்பு.!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இன்று(26) தண்ணீர் வாளியில் விழுந்து, ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

60 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் சிக்கிய இந்தியப் பிரஜை.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கிலோகிராம் 100 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜையொருவர் இன்று (26) திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.…

69 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் சஜித்தின் அடிமைகள் அல்லர்.!

நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்லர் என்றும், அந்த அரசியல் கூட்டணியில் தாங்களும் ஒரு முக்கிய பங்காளிகள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் முதலாம் தர மாணவர்கள் 10 பேரில் ஒருவருக்கு பார்வைக் குறைபாடு.!

வடக்கு மாகாணத்தில் முதலாம் தர மாணவர்களில் சுமார் 10 பேரில் ஒருவருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது, ‘தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம் – கட்டம் II’ பாடசாலைக்…

72 0 0