உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரபல சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்!

இந்திய செய்திகள் 49 நிமிடங்கள் முன்
83 பார்வைகள்

இந்தியாவின் பிரபல சமையல் கலை நிபுணரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவருமான செஃப் தாமு (Chef Damu), தனது 72ஆவது வயதில் இன்று (ஒக்டோபர் 25) காலமானார்.

செஃப் தாமு எனப் பிரபலமாக அறியப்படும் கே. தாமோதரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த இவர், சமையல் துறையில் பல தசாப்தங்களாகப் பணியாற்றியதுடன், பல்வேறு தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்களிடையே பிரபலமானார்.

2010ஆம் ஆண்டு, தொடர்ந்து 24 மணித்தியாலங்கள், 30 நிமிடங்கள், 12 விநாடிகள் சமையல் செய்து, 617 உணவு வகைகளைத் தயாரித்ததன் மூலம் கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

சமையல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசாங்கம் 2025ஆம் ஆண்டு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கிக் கௌரவித்தது. மேலும், சமையல் தொடர்பான கல்வி மற்றும் பயிற்சித் துறைகளிலும் அவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

செஞ்சியில் காணாமல்போன சிறுமி : பொலிஸார் தீவிர விசாரணை

செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் சிபிசிஐடி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த…

109 0 0
இந்திய செய்திகள்

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா இல்லை அலங்கோலமா? – கனிமொழி எம்.பி. கேள்வி

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா இல்லை அலங்கோலமா? என தி.மு.க எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு…

87 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் இனிப்பு சேர்க்கத் தடை? 

ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் (Sucrose) மற்றும் பிரக்டோஸ் (Fructose) போன்ற சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு…

105 0 0
இந்திய செய்திகள்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 105 கிலோ எடை கொண்ட அரிய வகை மீன்கள்.!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து நேற்று (20) 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து…

108 0 0