உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஒரு வயது ஆண் குழந்தை உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
64 பார்வைகள்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இன்று(26) தண்ணீர் வாளியில் விழுந்து, ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் தன்னாமுனை கிறிஸ்துவின் நிழல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதும், 2 மாதங்களை கொண்ட “அக்விவ் விகான்” என்ற ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான இன்று பகல் 11.00 மணியளவில் குழந்தை நித்திரையில் இருந்த பொழுது, தாயார் கிணற்றடியில் 20 லீற்றர் கொண்ட சுவர் பூச்சு(பெயின்) வாளியில் உடைகளை கழுவிக் கொடியில் காய விரித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது, நித்திரையில் இருந்து எழுந்து அங்கு குழந்தை வந்ததையடுத்து அவரை குளிக்க வைப்பதற்காக குழந்தையின் ஆடைகளை எடுப்பதற்கு வீட்டின் அறைக்கு சென்று திரும்பிய பொழுது, குழந்தை அந்த நீர் நிறைந்த வாளிக்குள் விழுந்து கிடந்துள்ளது.

இதனையடுத்து தாயாரால் மீட்கப்பட்ட குழந்தை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதை அயடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் விசாரணைகளை மேற்கொண்டு குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் தாயொருவர் உயிர்மாய்ப்பு.!

யாழில் இளம் தாயொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். கண்டாமை – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த கருநேசன் கார்த்திகா (வயது 28) என்பவரே இவ்வாறு…

77 0 0
இலங்கை செய்திகள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அநுர அரசு பாதுகாக்க வேண்டும்.!

மக்களுக்கு அரசால் வழங்கப்படும் எரிபொருள் மானியங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்காமல், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலமாகவே நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற…

54 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.!

மத்திய கல்வி அமைச்சால் நாளை (27.10.2026) செவ்வாய்க்கிழமை நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் இடர்கால…

63 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் சிக்கிய இந்தியப் பிரஜை.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கிலோகிராம் 100 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜையொருவர் இன்று (26) திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.…

73 0 0