உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் இருந்து நெடுந்தூர பேருந்து சேவைகள் இணைந்த நேர அட்டவணையில் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
81 பார்வைகள்

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான நெடுந்தூரப் பேருந்து சேவைகள் நாளை (27.10.2026) செவ்வாய்க்கிழமை முதல் இணைந்த நேர அட்டவணையின் கீழ் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொறுப்பின் கீழ் இணைந்த நேர அட்டவணைக்கு அமைய பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கௌரவ நீதிமன்றம் பணித்துள்ளது. அதற்கமையவே இம்முறை சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சுமார் 134 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த நெடுந்தூரப் பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவதற்குக் கடந்த காலங்களிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.

பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவது தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து சங்கத்தால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. தற்போது கௌரவ நீதிமன்றத்தின் பணிப்புக்கு அமைவாக, இணைந்த நேர அட்டவணையின் கீழ் பேருந்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, நாளை செவ்வாய்க்கிழமை முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்குச் செல்லும் நெடுந்தூரப் பேருந்துகள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உ**யிரிழப்பு.!

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக செயற்பாட்டாளர் வசந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

சீரற்ற காலநிலை; 26 பாடசாலைகளுக்கு விடுமுறை.!

சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய…

86 0 0
இலங்கை செய்திகள்

புத்தளத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவு.!

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று…

73 0 0
இலங்கை செய்திகள்

உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ**லை; முக்கிய துப்பாக்கிதாரி கைது.!

களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய துப்பாக்கிதாரி கடுவலை, ரனல பகுதியில் உள்ள வீடொன்றில்…

79 0 0