உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

10 மாதங்களுக்குப் பின்னர் வெனிசூலா திரும்பினார் மச்சாடோ!

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
92 பார்வைகள்

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் நாட்டில் நிலவிய அச்சுறுத்தல், அநியாய கைது அச்சம் காரணமாக சுமார் 10 மாதங்களுக்கும் மேலான நாடு கடந்த வாழ்க்கைக்குப் பிறகு வெனிசூலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியான மரியா கொரினா மச்சாடோ, மீண்டும் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.

நாடு திரும்புவதற்குப் பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் வெனிசூலா மண்ணை அடைந்துள்ளார்.


கடந்த ஜனவரி மாதம் அமைதிக்கான நோபல்  பரிசைப் பெறுவதற்காக நோர்வே சென்ற மச்சாடோ, அதன்பின்னர் நாடு திரும்ப முடியாத நிலை உருவானது.


அந்த காலகட்டத்தில், அமெரிக்காவினால் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.


இந்த நிலையில், நாட்டிற்குத் திரும்பியுள்ள மச்சாடோ, தலைநகர் காராகஸுக்கு ஆதரவாளர்களின் பேரணியுடன் உற்சாகமாகப் பயணிக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளன.


மச்சாடோவின் வருகையை அவரது அரசியல் கூட்டாளியும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான எட்முண்டோ கோன்சலஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.


மச்சாடோவின் இந்த வருகை வெனிசூலாவில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை என்றும், தானும் விரைவில் வெனிசூலா திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


வெனிசூலாவில் மீண்டும் சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முக்கிய படியாகவே மச்சாடோவின் வருகை பார்க்கப்படுகிறது.


அமெரிக்கா முன்னெடுத்த நல்லிணக்கப் பேச்சுவார்த்தைகளின் நேரடி விளைவாகவே மச்சாடோ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான சூழல் உருவானதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.


வெனிசூலாவில் ஜனநாயகம் மலர்வதற்கும், நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளே வழிவகுத்துள்ளதாக அவர் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.


இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் வௌ்ளை மாளிகைக்கு சென்ற மரியா கொரினா மச்சாடோ தான் பெற்றுக் கொண்ட நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அன்பளிப்பு செய்திருந்தார்.


வெனிசூலாவில் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை அகற்றுவதிலும், தனது பாதுகாப்பான நாடு திரும்புதலுக்கும் அமெரிக்காவும் ட்ரம்ப் நிர்வாகமும் வழங்கிய அரசியல் மற்றும் ராஜதந்திர ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் அதனை கையளித்ததாக கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

80 வயதில் 4ஆவது முறையாகவும் லூலா டா சில்வா பிரேசிலின் ஜனாதிபதியானார்!

பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோலின் மூத்த மகனும் செனட்டருமான ஃப்ளாவியோ போல்சனாரோவை வீழ்த்தி, தற்போதைய ஜனாதிபதி லூயிஸ்…

84 0 0
உலக செய்திகள்

மெக்சிகோவில் இறந்தோர் தினம்: பேய் வேடங்களில் அசத்திய குட்டி நாய்கள்!

மெக்சிகோவில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு, சிஹுவாவா (Chihuahua) இன நாய்கள் வித்தியாசமான வேடமணிந்து அணிவகுத்து அனைவரையும் கவர்ந்துள்ளன. மெக்சிகோ நகரின் சப்புல்டெபெக் பூங்காவில் நடைபெற்ற இந்த…

75 0 0
உலக செய்திகள்

பிரான்ஸில் மீண்டும் போராட்டம் : ஆயிரக்கணக்கானோர் கைது

வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பாடசாலைகளில் உள்ள மோசமான வசதிகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்தின் மற்றுமொரு கட்டம் நேற்று (24) இடம்பெற்றதாகவும், இதன்போது…

74 0 0
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையத்தை புறக்கணிக்குமாறு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைப் (King Khalid International Airport) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எச்சரிக்கை…

97 0 0