உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

இந்திய செய்திகள் 59 நிமிடங்கள் முன்
74 பார்வைகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (26) விடுதலை செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்/எம்.எல்.ஏ.-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 

தீர்ப்பை அறிவிப்பதற்காக ராகு ல் காந்தி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அவரது ஆதரவாளர்கள் அந்தத் தீர்ப்பை வரவேற்றதுடன், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

இந்த வழக்கைப் பதிவு செய்தவர், சுல்தான்பூரின் கோட்வாலி தேஹாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹனுமன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவரும், சுல்தான்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவருமான பாஜக தலைவர் விஜய் மிஷ்ரா ஆவார்.

2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பெங்களூருவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில், அம்த் ஷா குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, மிஷ்ரா 2018 ஆகஸ்ட் மாதத்தில் இந்த வழக்கை பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைச் செய்தி!

வங்கக் கடலில் ‘அர்னாப்’ (Arnab) புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் இன்று (26) நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளைய (27) தினத்துக்குள் மிகத் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும்…

67 0 0
இந்திய செய்திகள்

துப்பில்லாத ஹீரோவாக மாறிய துப்பாக்கி ஹீரோ: மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் தொடர் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தொடரும் தாக்குதல்கள், உயிரிழப்பு சம்பவங்கள்…

93 0 0
இந்திய செய்திகள்

பிரபல சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்!

இந்தியாவின் பிரபல சமையல் கலை நிபுணரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவருமான செஃப் தாமு (Chef Damu), தனது 72ஆவது வயதில் இன்று (ஒக்டோபர் 25)…

103 0 0
இந்திய செய்திகள்

செஞ்சியில் காணாமல்போன சிறுமி : பொலிஸார் தீவிர விசாரணை

செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் சிபிசிஐடி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த…

117 0 0