யாழ். பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் இரண்டாமிடம்.!
யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜெரோம் ஜொய்சன் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் எதிர்வரும் நவம்பர் மாதம் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் ஏழாவது தமிழியல் ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பேச்சுப் போட்டி கடந்த புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட நிலையில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி சார்பில் பங்கேற்ற ஜெரோம் ஜொய்சன் தனது சிறந்த உரையாற்றல் திற வெளிப்பாட்டின் மூலம் இரண்டாம் இடத்தைச் சுவீகரித்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

