உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

80 வயதில் 4ஆவது முறையாகவும் லூலா டா சில்வா பிரேசிலின் ஜனாதிபதியானார்!

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
85 பார்வைகள்

பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோலின் மூத்த மகனும் செனட்டருமான ஃப்ளாவியோ போல்சனாரோவை வீழ்த்தி, தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 4ஆவது முறையாகவும் ஜனாதிபதியாக தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கருத்துக் கணிப்புகளையும், முதலாவது கட்ட தேர்தல் முடிவுகளையும் தலைகீழாக மாற்றி, 80 வயதான லூலா டா சில்வா இந்த அதிர்ச்சி வெற்றியைப் பதிவுசெய்துள்ளார்.

1980களில் பிரேசிலில் ஜனநாயகம் திரும்பிய பிறகு, முதலாம் சுற்றில் பின்னடைவைச் சந்தித்து இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகும் முதல் தலைவராக லூலா மாறியுள்ளார்.

லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் தீவிர வலதுசாரி கட்சிகளின் வெற்றி அலை வீசி வந்த நிலையை மாற்றி, லூலாவின் இந்த வெற்றி அந்த பிராந்தியத்தில் ஒரு முக்கிய அரசியல் சமநிலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

மேலும், போல்சனாரோ குடும்பத்திற்கு ஆதரவாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வெளியுறவுத்துறை பிரசாரம் செய்த போதிலும், அந்த முயற்சியை முறியடித்து லூலா வெற்றி பெற்றுள்ளார்.

இருப்பினும், லூலாவின் இந்த 4ஆவது ஆட்சிக்காலம் கடுமையான சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலதுசாரிக் கூட்டணிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால், சட்டங்களை நிறைவேற்றுவதிலும் ஆட்சி நிர்வாகத்திலும் அவர் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

அத்துடன், நாட்டின் அதிகரிக்கும் கடன் சுமை (மொ.தே. உ 82%க்கும் மேல்) மற்றும் 2.3% ஆக எதிர்பார்க்கப்படும் குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகியவையும் லூலாவின் புதிய ஆட்சிக் காலத்தில் முக்கிய சவால்களாக உருவெடுத்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

10 மாதங்களுக்குப் பின்னர் வெனிசூலா திரும்பினார் மச்சாடோ!

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் நாட்டில் நிலவிய அச்சுறுத்தல், அநியாய கைது அச்சம் காரணமாக சுமார் 10 மாதங்களுக்கும் மேலான நாடு கடந்த வாழ்க்கைக்குப் பிறகு வெனிசூலாவின்…

92 0 0
உலக செய்திகள்

மெக்சிகோவில் இறந்தோர் தினம்: பேய் வேடங்களில் அசத்திய குட்டி நாய்கள்!

மெக்சிகோவில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு, சிஹுவாவா (Chihuahua) இன நாய்கள் வித்தியாசமான வேடமணிந்து அணிவகுத்து அனைவரையும் கவர்ந்துள்ளன. மெக்சிகோ நகரின் சப்புல்டெபெக் பூங்காவில் நடைபெற்ற இந்த…

75 0 0
உலக செய்திகள்

பிரான்ஸில் மீண்டும் போராட்டம் : ஆயிரக்கணக்கானோர் கைது

வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பாடசாலைகளில் உள்ள மோசமான வசதிகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்தின் மற்றுமொரு கட்டம் நேற்று (24) இடம்பெற்றதாகவும், இதன்போது…

74 0 0
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையத்தை புறக்கணிக்குமாறு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைப் (King Khalid International Airport) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எச்சரிக்கை…

97 0 0