போ*தைப்பொருளுடன் சிக்கிய இந்தியப் பிரஜை.!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கிலோகிராம் 100 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜையொருவர் இன்று (26) திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வியட்நாம் விமான சேவையின் VN671 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணி, வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியே வெளியேற முற்பட்ட போது, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் பயணப் பொதிகளை ஸ்கேனர் இயந்திரங்கள் மூலம் சோதனையிட்ட போது, பொதியினுள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் 100 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ‘குஷ்’ போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 51,000,000 (ரூ. 51 மில்லியன்) ரூபாவுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்திலுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


