உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விசாரணைகள் முடிந்தும் நாமலுக்கு பிணை மறுப்பு; நீதிமன்றத்திலும் நீதி கிடைக்காத நிலை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
88 பார்வைகள்

வழக்குகளில் விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்தால் பிணை வழங்குவதே இயல்பான நடைமுறை என்ற போதிலும், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையிலும் அவருக்கு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்படுவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசின் நடவடிக்கைகள் தோல்வியடையும் போதெல்லாம் தேரர்களுக்கும் ராஜபக்ஷவினருக்கும் எதிராக அடக்குமுறையைக் கையில் எடுத்து வருகின்றது.

நாமல் ராஜபக்ஷ எவ்வித சாட்சியங்களுமின்றிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் பிணை வழங்கப்பட வேண்டும். நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை மறுக்கப்பட்டு நீதிமன்றத்துக்குள்ளும் நீதி கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

இருப்பினும், நாம் இன்னமும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நீதிமன்றச் செயற்பாடுகளை மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள அரசின் ஆட்சியில், நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றது. பொருளாதார வளர்ச்சி வேகம் 5.3 சதவீதத்திலிருந்து 4.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பொருட்களின் விலையேற்றம், வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திரசிகிச்சைகளுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவலநிலை என்பன ஏற்பட்டுள்ளன.

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு காரணமாக 18 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளமை, ஜனாதிபதியின் செயலாளர் கொள்கலன்களை விடுவித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளமை, பொலிஸ்மா அதிபர் மற்றும் சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் எனப் பல ஒழுங்கீனங்கள் நிலவுகின்ற போதிலும், அரசு ஊழலை ஒழிப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாண அணி இரண்டாம் இடம்.!

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை கணிதப் போட்டி –…

67 0 0
இலங்கை செய்திகள்

34 அரச நிறுவனங்களுக்கு மூடுவிழா.!

காலத்துக்குப் பொருத்தமற்ற மற்றும் செயற்திறனற்ற 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒன்றிணைப்பதற்கும் நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். பத்தரமுல்ல வோட்டர்ஸ்…

77 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி.!

அனுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் புராதன மதப் பின்னணியைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டப்…

52 0 0
இலங்கை செய்திகள்

மன்னிப்பு வழங்காவிட்டால் இந்நேரம் ஞானசார தேரர் விடுதலையாகியிருப்பார்.!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்காமல் இருந்திருந்தால் அவர் தமது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்நேரம் விடுதலையாகியிருப்பார் என்றும், ஜனாதிபதி பொதுமன்னிப்பு…

61 0 0