உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

34 அரச நிறுவனங்களுக்கு மூடுவிழா.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
85 பார்வைகள்

காலத்துக்குப் பொருத்தமற்ற மற்றும் செயற்திறனற்ற 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒன்றிணைப்பதற்கும் நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற அரச நில அளவையாளர் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அரசியல் நியமனங்கள் காரணமாக அரச சேவையின் கீழ்மட்டப் பதவிகள் பெருமளவில் நிரம்பி வழிகின்றன என்றும், இதனால் அரசுக்குப் பாரிய செலவுச் சுமை ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிறுவனங்களை மூடுவது அல்லது ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சினூடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சில நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட கால தேவைகள் இன்று மாறியுள்ளன. அன்று அரசு மட்டுமே செய்ய வேண்டியிருந்த சேவைகளை இன்று தனியார் துறை திறம்பட முன்னெடுக்கின்றது. எனவே, தேவையற்ற நிறுவனங்களை நிர்வகிப்பதை விடவும் தனியாரிடமிருந்து சேவைகளைப் பெறுவது இலாபகரமானதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

நாட்டில் ஏற்படும் உள்நாட்டுப் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்குப் போதுமான ரூபாய் கைவசம் உள்ளபோதிலும், சர்வதேச மற்றும் வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு பொருளாதாரம் இன்னும் பலமடையவில்லை.

அரச சேவையில் தொழில்வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் பாரிய சவால்கள் நிலவுகின்றன. திறமையான அரச பொறிமுறையை உருவாக்காமல் திறைசேரி நிதியைக் கீழ்மட்ட மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியாது.

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், 2027ஆம் ஆண்டில் சம்பள அதிகரிப்புக்கு 110 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதால், தற்போதைய வரவு – செலவுத் திட்டத்தில் அத்தியாவசியக் கொடுப்பனவுகள் வழங்குவது குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

2028ஆம் ஆண்டில் புதிதாக அடிப்படைச் சம்பள உயர்வு இருக்காது. எனினும் தொழில்வல்லுநர்களை அரச சேவையில் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான கொடுப்பனவுகள் குறித்து அந்த நாட்களில் பெருமளவில் பரிசீலிக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கைப்பற்றல்.!

காலி, தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து இன்று…

77 0 0
இலங்கை செய்திகள்

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாண அணி இரண்டாம் இடம்.!

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை கணிதப் போட்டி –…

74 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி.!

அனுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் புராதன மதப் பின்னணியைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டப்…

58 0 0
இலங்கை செய்திகள்

விசாரணைகள் முடிந்தும் நாமலுக்கு பிணை மறுப்பு; நீதிமன்றத்திலும் நீதி கிடைக்காத நிலை.!

வழக்குகளில் விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்தால் பிணை வழங்குவதே இயல்பான நடைமுறை என்ற போதிலும், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையிலும் அவருக்கு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்படுவதில்லை…

91 0 0