உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னிப்பு வழங்காவிட்டால் இந்நேரம் ஞானசார தேரர் விடுதலையாகியிருப்பார்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
62 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்காமல் இருந்திருந்தால் அவர் தமது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்நேரம் விடுதலையாகியிருப்பார் என்றும், ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முறையில் தவறுகள் இருந்தால் அதற்கு ஞானசார தேரர் பொறுப்பாக முடியாது என்றும் புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசர்நாய்க் கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 2017ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தண்டனைக் காலத்தில் ஞானசார தேரர் எந்தவொரு அரசிடமும் பொதுமன்னிப்புக் கோரவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார் என்றும், உயர்நீதிமன்றத்தால் அந்தப் பொதுமன்னிப்பு தற்போது இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன அன்று பொதுமன்னிப்பு வழங்காமல் இருந்திருந்தால், ஞானசார தேரர் 2024 அல்லது 2025ஆம் ஆண்டிலேயே தண்டனைக் காலத்தை நிறைவு செய்து விடுதலையாகியிருப்பார் என்றும் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகம் இழைத்த தவறுக்காக ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையை ஏற்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், அரசமைப்பில் உள்ள ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதி இந்தத் தவறைத் திருத்தி, ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாண அணி இரண்டாம் இடம்.!

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை கணிதப் போட்டி –…

68 0 0
இலங்கை செய்திகள்

34 அரச நிறுவனங்களுக்கு மூடுவிழா.!

காலத்துக்குப் பொருத்தமற்ற மற்றும் செயற்திறனற்ற 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒன்றிணைப்பதற்கும் நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். பத்தரமுல்ல வோட்டர்ஸ்…

79 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி.!

அனுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் புராதன மதப் பின்னணியைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டப்…

53 0 0
இலங்கை செய்திகள்

விசாரணைகள் முடிந்தும் நாமலுக்கு பிணை மறுப்பு; நீதிமன்றத்திலும் நீதி கிடைக்காத நிலை.!

வழக்குகளில் விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்தால் பிணை வழங்குவதே இயல்பான நடைமுறை என்ற போதிலும், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையிலும் அவருக்கு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்படுவதில்லை…

88 0 0