உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
58 பார்வைகள்

அனுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் புராதன மதப் பின்னணியைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

இந்திய அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 7.7 பில்லியன் ரூபாவாகும். இதற்கான அபிவிருத்திக் கட்டமைப்புத் திட்டம் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

அனுராதபுரம் புனித நகரத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, நடந்து சென்று அபிவிருத்திப் பணிகளுக்குரிய காணிகள் மற்றும் திட்ட வரைபடங்களைப் பார்வையிட்டமையுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடி முன்னேற்றக் கட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று தடாகங்களைச் சுற்றியுள்ள வீதி அபிவிருத்திப் பணிகள், மேற்கு ஆராமய விகாரை வளாகத்தின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் ருவன்வெலிசாயவுக்கு அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள வாகன நிறுத்துமிடத்துக்கான காணி என்பவற்றையும் ஜனாதிபதி ஆய்வு செய்தார்.

தொன்மை மற்றும் மதப் பின்னணியைப் பாதுகாத்து அனைத்துப் பணிகளையும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, திட்ட அமுலாக்கத்தின் போது எழும் பிரச்சினைகளுக்குத் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் இணைந்து தீர்வுகண்டு பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாயவை வழிபட்டு ஆசி பெற்ற ஜனாதிபதிக்கு, ருவன்வெலிசாய விகாராதிபதி ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.

இந்த நிகழ்வில் புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உட்பட துறை சார்ந்த பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கைப்பற்றல்.!

காலி, தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து இன்று…

77 0 0
இலங்கை செய்திகள்

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாண அணி இரண்டாம் இடம்.!

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை கணிதப் போட்டி –…

73 0 0
இலங்கை செய்திகள்

34 அரச நிறுவனங்களுக்கு மூடுவிழா.!

காலத்துக்குப் பொருத்தமற்ற மற்றும் செயற்திறனற்ற 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒன்றிணைப்பதற்கும் நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். பத்தரமுல்ல வோட்டர்ஸ்…

84 0 0
இலங்கை செய்திகள்

விசாரணைகள் முடிந்தும் நாமலுக்கு பிணை மறுப்பு; நீதிமன்றத்திலும் நீதி கிடைக்காத நிலை.!

வழக்குகளில் விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்தால் பிணை வழங்குவதே இயல்பான நடைமுறை என்ற போதிலும், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையிலும் அவருக்கு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்படுவதில்லை…

91 0 0