உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
83 பார்வைகள்

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் 2026.10.22 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டச் சட்டகம் (Revised National Curriculum Framework – 2026) மற்றும் பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் சான்றளிப்பு சட்டகம் (School Level Assessment and Certification Framework) தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு முதலாம் தரத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்கான தற்போதைய தயார்நிலை குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள், இணைய வசதிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை வழங்கும் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகள் ஐந்து தூண்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும், அதற்காக தேசிய வழிநடத்தல் குழுவொன்றும், அந்த ஐந்து தூண்களுக்கும் உரிய ஐந்து உபகுழுக்களும் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய கல்வி ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு அமைவாக 2025ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், 2026 ஜனவரி மாதத்தில் முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் செயலாளர் விளக்கமளித்தார்.

மேலும், 2027ஆம் ஆண்டில் இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா, உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் கல்வி முறைமைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கல்வி முறைமை உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, தேசிய கலைத்திட்டச் சட்டகத்தைத் தயாரிக்கும் போது அடிப்படை ஆய்வுகள் மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் கலைத்திட்டச் சீர்திருத்தச் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களின் அறிவு, ஒழுக்கப் பண்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முழுமையான அணுகுமுறையையும் (Holistic), கற்றல் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையையும் (Outcome-based) கொண்ட கல்வி முறைமையை நோக்கிப் பாடசாலை முறைமையை வழிநடத்துவதன் மூலம், எதிர்கால உலகிற்கு ஏற்ற மனிதப் பண்புகளைக் கொண்ட புத்தாக்கவாதிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களை உருவாக்குவதற்கு இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வலுவான அடித்தளமாக அமையும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளுக்கு ஆளுநர் களப்பயணம்; மக்கள் முன்வைத்த கோரிக்கைகள்.!

யானைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த துணுக்காய் பிரதேச மக்கள், தமது பகுதிகளில் யானை வேலிகளை விரைவாக அமைத்துத் தருமாறு…

34 0 0
இலங்கை செய்திகள்

ஹெக்டர் அப்புஹாமி எம்.பியின் கருத்துக்கு சர்வதேச இந்து மத பீடம் கண்டனம்.!

அண்மையில் தாய்லாந்தின் பதில் பிரதமர் பௌத்த மத நிகழ்விற்காக இலங்கை வந்த போது மத வைபவத்தில் கலந்து கொண்டார். இது பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம்…

80 0 0
இலங்கை செய்திகள்

நாமலுக்கு மஹிந்த உருக்கமான கடிதம்.!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடிதம்ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

80 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து.!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் பிங்அராவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நாவலப்பிட்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த…

68 0 0