உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் குறித்து அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
26 பார்வைகள்

வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான மாகாண அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (19.09.2026) சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை நிர்வகித்து வருவதுடன், மாவட்டப் பொது மருத்துவமனைகளும் மாகாண சபையின் நிர்வாகத்துக்குட்பட்டே இயங்கி வருகின்றமை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு, ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு அதிகளவான மூலதன மற்றும் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, நிதி ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக இல்லாத நிலை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதிகளவான மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் மாகாண சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நிதிச் சுமையும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், மருத்துவமனைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமல், மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான ஒதுக்கீடாக ஒருங்கிணைந்த முறையில் நிதி வழங்கப்படுவதால் நடைமுறையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பிலும் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனுடன், மருத்துவமனைகளின் தேவைகளை முறையாக ஒழுங்குபடுத்தி முன்னுரிமைப்படுத்துதல், தேவைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் கொள்முதல் செயன்முறைகளில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார சேவையின் தற்போதைய தேவைகள் மற்றும் நடைமுறைச் சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது தொடர்பிலும், குறிப்பாக மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவுத் தபால் விநியோகத்தில் தாமதம் : பல்கலைக்கழக மாணவி பாதிப்பு!

டிக்கோயா புளியாவத்தை, இன்ஜெஸ்றி பகுதியில் பதிவு தபால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.…

19 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் கள்ளியாடி கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம்!

கள்ளியாடி கிராம உத்தியோகத்தர் பிரிவு (MN/06) இல் இன்று 19.09.2026 கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்…

5 0 0
இலங்கை செய்திகள்

வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை…

22 0 0
இலங்கை செய்திகள்

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சுப மங்கள மண்டபத்தில் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள…

33 0 0