தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்.!
தியாக தீபம் திலீபனின் 39ம் ஆண்டு நினைவு தினத்தின் முதலாவது நாள் இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



