உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

சித்தாண்டியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
42 பார்வைகள்

மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் சித்தாண்டியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சித்தாண்டி சந்திக்கு அருகில் முகாமிட்டு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அத்துமீறிய செயற்பாடுகள் இதுவரையில் தடுத்து நிறுத்தப்படாத நிலையில் மேய்ச்சல் தரை காணிகள் இல்லாமல்போகும் நிலையில் கால்நடைகள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த நீதி கோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டை பூர்த்தி செய்துள்ள 1095 நாளையொட்டி இந்த கவனயீர்ப்பு போராட்டம் பண்ணையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மகாவலியே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், கால்நடைகளின் நிலத்தை அபகரிக்காதே, கால்நடைகளின் மேய்ச்சல் நில அபகரிப்பினை தடுத்து நிறுத்து, தமிழருக்கு ஒரு சட்டம், சிங்களவருக்கு ஒரு சட்டமா?சட்டத்தினை சமமாக அமுல்படுத்து, ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன், மகாவலியே மௌனம் காப்பது ஏன்? போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கால்நடை பண்ணையாளர்கள் தமது துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட தமது வாடிகளை அத்துமீறிய குடியேற்றவாசிகள் எரித்து மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட குடிசையொன்றை எரித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதேபோன்று தமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களை நிறைவு செய்து 1095 நாளைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தீப்பந்தத்தினை எரித்து போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் ஒரு பண்ணையாளர் பாலை தலையில் ஊற்றி போராட்டத்தினை முன்னெடுத்தார்.

இதன்போது மயிலத்தமடு மற்றும் மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் மூன்று ஆண்டுகளைக் கடந்து, 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும், தங்களுக்கான நிரந்தரத் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது அளித்த வாக்குறுதிகள் மற்றும் உத்தரவுகள் இன்னும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் மேய்ச்சல் நிலங்கள் சட்டவிரோதமாக உழவு செய்யப்பட்டுள்ளன. இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாது போயுள்ளதோடு, உணவின்றி மாடுகள் இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பண்ணையாளர்களின் வாடிகளுக்குள் சட்டவிரோதத் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து பொலிஸில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்துகின்றனர்.

சட்டம் இருவேறாகப் பிரயோகிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் அல்லது பண்ணையாளர்கள் சிறு தவறு செய்தாலும் வனவளத் திணைக்களம் மூலம் உடனடியாகக் கைது செய்யப்படும் நிலையில், மேய்ச்சல் நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, இன்னும் 5 நாட்களுக்குள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறினால், தங்களது அறவழிப் போராட்டத்தைச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றப்போவதாகப் பண்ணையாளர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடைகளும் வாழ்வாதாரமும் முற்றாக அழிந்துபோனால் பண்ணையாளர்கள் வீதியில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலைமையே உருவாகும் என்றும், இதற்கு அரசாங்கமும் மகாவலி அதிகார சபையுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத், சிவில் சமூக செயற்பாட்டாளர்களான எஸ்.சிவயோகநாதன், அருட்தந்தை லுக்காஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் பெருமளவான புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரலாறு படைத்த ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்.!

உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் (World Athletics Ultimate Championship) மற்றும் டைமண்ட் லீக் (Diamond League) ஆகிய இரண்டு பட்டங்களையும் வென்ற இலங்கையின் ஈட்டி எறிதல்…

46 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

தியாக தீபம் திலீபனின் 39ம் ஆண்டு நினைவு தினத்தின் முதலாவது நாள் இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

41 0 0
இலங்கை செய்திகள்

எமது கூட்டங்களுக்கு வருபவர்கள் மது அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை.!

“எமது கூட்டங்களுக்கு வருகை தருபவர்களை மதுபானம் அருந்தாமல் வருமாறு கட்டளையிடும் அதிகாரம் எங்களிடம் கிடையாது. மது அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகும். நாங்கள் யாருக்கும்…

44 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண கால்நடை வைத்தியர்கள் சுகயீன விடுப்பு போராட்டம்.!

வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் நிர்வாகம் மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கக் கோரி சுகயீன விடுப்பு…

38 0 0