உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவதன் மூலம் அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது அம்பலம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
132 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம், தற்போதைய அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற உண்மையை அரசே நாட்டுக்கு வெளிப்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. அந்தக் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்குப் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வதையும் பார்க்க முடிகின்றது. ஆனால், ஒரு கூட்டத்துக்குத் திரளும் மக்களின் எண்ணிக்கையை மாத்திரம் வைத்துக்கொண்டு, நாடு முழுவதும் அந்தக் கட்சிக்கு அதிகளவான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கூற முடியாது.

ஜே.வி.பி. மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற காலங்களிலும் பெரிய கூட்டங்களை நடத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அவர்களின் உறுதியான உறுப்பினர்களே அத்தகைய கூட்டங்களுக்குச் செல்வர்.

அரசுக்கு மக்கள் மத்தியில் உண்மையான ஆதரவு இருக்குமானால், தேர்தலை நடத்தி அதனை நிரூபிக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து காலதாமதம் செய்வதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமை மட்டுப்படுத்தப்படுகின்றது. தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவதைப் பார்க்கும் போது, அரசுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறித்து அரசுக்கே அச்சம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

எந்தவொரு அரசும் மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே ஆட்சியை முன்னெடுக்க வேண்டும். மக்கள் தமது வாக்குரிமை மூலம் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான அளவுகோல் தேர்தலாகும். எனவே, பொய்ப் பிரசாரங்களை விடுத்து, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி மக்களின் உண்மையான தீர்ப்பை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

139 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரை அடிக்க முயன்ற தனித்துணை ஆட்சியர்; அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.!

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால் தாக்க முயன்றதை…

121 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு மக்கள் இனி இடமளிக்கமாட்டார்கள்.!

இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ கிடையாது என்றும், அவர்களின் குடும்ப அரசியலுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும்…

105 0 0
இலங்கை செய்திகள்

மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம்; நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்.!

இலங்கை விமானப்படைக்காக உக்ரைன் அரசிடமிருந்து 2006ஆம் ஆண்டு நான்கு ‘மிக்-27’ (MiG-27) போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததிலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மேலும் மூன்று மிக் விமானங்களைப்…

132 0 0