உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

இலங்கைத் தமிழரை அடிக்க முயன்ற தனித்துணை ஆட்சியர்; அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
121 பார்வைகள்

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால் தாக்க முயன்றதை கண்டித்து நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கை தமிழர்கள் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தை ஐந்து மணி நேரத்துக்கு மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு சென்ற இலங்கைத் தமிழர்கள் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இலங்கை தமிழர்களை கண்காணிப்பதற்காக மண்டபத்தில் தனித்துணை ஆட்சியர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கும், மருத்துவம் சிகிச்சை மற்றும் கல்வி பயில வெளியூர் சென்றாலும் தனித்து தனித்துணை ஆட்சியரிடம் விடுப்பு பெற்று செல்ல வேண்டும்.

இந்நிலையில் உள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் இருந்து அகதியாக தனுஷ்கோடி சென்று 2007 ஆம் ஆண்டு முதல் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெகன் (50 வயது) என்பவர் மருத்துவ சிகிச்சைக்காகவும், உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ உதவிக்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக சென்னை செல்ல மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் விடுப்பு வழங்குவதற்கு தனித்துணை ஆட்சியர் இலஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

ஜெகன் பணம் கொடுக்காததால் தொடர்ந்து அவருடைய விடுப்பு மனு நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மதியம் இலங்கை தமிழர் ஜெகன் தனித்துறை ஆட்சியரை சந்தித்து விடுப்பு விண்ணப்பம் தொடர்பாக கேட்க சென்றபோது தனித்துணை ஆட்சியர் கலை மன்னன் இலங்கைத் தமிழர் ஜெகனை காலணியை கழற்றி அடிக்க முயன்றுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்த இலங்கை தமிழர் ஜெகன் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதனிடையே இலங்கை தமிழரை தனி துணை ஆட்சியர் காலணியால் தாக்க முயன்றதை கண்டித்து தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தை இலங்கை தமிழர்கள் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த இராமநாதபுரம் வட்டாட்சியர் காளீஸ்வரர் ஜெகன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் தனித்துறை ஆட்சியர் கலைமன்னன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவரை உடனடியாக பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் இலங்கை தமிழர்கள் விடுப்பு எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட இராமநாதபுரம் வட்டாட்சியர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் தகவல் தெரிவிப்பதாகவும் வரும் திங்கட்கிழமை தனித்துணை ஆட்சியர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு முகாமுக்குள் சென்றனர்.

மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை காலணியால் தாக்க முயன்ற தனித்துறை ஆட்சியரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வந்த நிலையில் இது குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

139 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு மக்கள் இனி இடமளிக்கமாட்டார்கள்.!

இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ கிடையாது என்றும், அவர்களின் குடும்ப அரசியலுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும்…

105 0 0
இலங்கை செய்திகள்

மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம்; நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்.!

இலங்கை விமானப்படைக்காக உக்ரைன் அரசிடமிருந்து 2006ஆம் ஆண்டு நான்கு ‘மிக்-27’ (MiG-27) போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததிலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மேலும் மூன்று மிக் விமானங்களைப்…

132 0 0
இலங்கை செய்திகள்

தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவதன் மூலம் அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது அம்பலம்.!

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம், தற்போதைய அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற உண்மையை அரசே நாட்டுக்கு வெளிப்படுத்தி வருகின்றது…

131 0 0