உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

சத்துருக்கொண்டான் படுகொ*லை; இராணுவ முகாம் அகழ்வாய்வு செய்யப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
133 பார்வைகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் குறித்த பகுதியில் இருந்த இராணுவ முகாம் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில் அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் வளமையான சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்றது.

இதன்போது சத்துருக்கொண்டான் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களுக்காக மாநகரசபை உறுப்பினர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் இந்த சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகரசபை முதல்வரின் தலைமையுரையினை தொடர்ந்து மாநகரசபையின் கடந்த கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டது.

அதனை தொடர்ந்து மாநகரசபையில் முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டதுடன் மாநகரசபையின் நிலையியல் கட்டளைக்குழுக்களின் முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு வாதப்பிரதிவாதங்களுடன் அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்றதுடன் மாநகரசபையின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இன்றைய அமர்வின்போது சத்துருக்கொண்டான் படுகொலையின் பிரதான பங்கினைக்கொண்ட சத்துருக்கொண்டான் பொய்ஸ் கார்டன் படைமுகாமில் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்கவும் குறித்த படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளான படை பொறுப்பதிகாரி உட்பட இனங்காணப்பட்ட படையினர் மீது நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தும் விசேட பிரேரணையொன்று மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்போது குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கிய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிரேரணை கொண்டுவந்தவர் முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்ததாகவும் ஏன் அக்காலப்பகுதியில் இந்த பிரேரணை கொண்டுவரப்படவில்லையென தெரிவித்தபோது அதற்கு எதிரான பல்வேறு கருத்துகள் இதன்போது தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

139 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரை அடிக்க முயன்ற தனித்துணை ஆட்சியர்; அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.!

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால் தாக்க முயன்றதை…

121 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு மக்கள் இனி இடமளிக்கமாட்டார்கள்.!

இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ கிடையாது என்றும், அவர்களின் குடும்ப அரசியலுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும்…

105 0 0
இலங்கை செய்திகள்

மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம்; நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்.!

இலங்கை விமானப்படைக்காக உக்ரைன் அரசிடமிருந்து 2006ஆம் ஆண்டு நான்கு ‘மிக்-27’ (MiG-27) போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததிலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மேலும் மூன்று மிக் விமானங்களைப்…

132 0 0