உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் கொ*லை; மனைவி கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
160 பார்வைகள்

கிரிந்திவெல பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச் சம்பவம் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வந்தது.

இதன்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றச் செயலுக்கு சதி செய்தல் மற்றும் அதற்கு துணைபுரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வந்த உயிரிழந்தவரின் மனைவி நேற்று (07) பிற்பகல் கிரிந்திவெல, நரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய பெண் எனவும், அவர் குறித்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர…

70 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இன்று மாலை 5.15 மணியளவில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர்…

77 0 0
இலங்கை செய்திகள்

இரவுகளில் குப்பை கொட்டுவோர் மீது சட்டநடவடிக்கை.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் முறையற்ற குப்பை அகற்றும் பழக்கத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தன்மைகள் பாதிக்கப்படுகின்றன. அனுமதியின்றி…

71 0 0
இலங்கை செய்திகள்

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உ**யிரிழப்பு.!

சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு வனவிலங்கு வைத்தியக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்கவில்லை. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை…

71 0 0