உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
169 பார்வைகள்

இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றும் அவருடன் இந்த விஜயத்தில் இணைந்துள்ளது.

இந்தப் பயணத்தின்போது, இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய இருதரப்பு விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இது குறித்து மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளையும், பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பன்முக ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்கின்றன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய பொருளாதார உதவியும், 2025ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலின் போது மீட்புப் பணிகளில் களமிறங்கிய முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதும் இவ்விரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

இது, ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கை மீதான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றது.

பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா – இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர…

70 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இன்று மாலை 5.15 மணியளவில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர்…

77 0 0
இலங்கை செய்திகள்

இரவுகளில் குப்பை கொட்டுவோர் மீது சட்டநடவடிக்கை.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் முறையற்ற குப்பை அகற்றும் பழக்கத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தன்மைகள் பாதிக்கப்படுகின்றன. அனுமதியின்றி…

71 0 0
இலங்கை செய்திகள்

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உ**யிரிழப்பு.!

சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு வனவிலங்கு வைத்தியக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்கவில்லை. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை…

71 0 0