யால தேசிய பூங்கா தற்காலிகமாக மூடல்!
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2-வது மண்டலங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிலவும் அதிக வெப்பநிலையால் விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் எதிர்கொள்ளும் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் மேலதிக தலைமை பணிப்பாளர் மஞ்சுளா அமரதுங்க, பூங்காவிற்குள் அதிக எண்ணிக்கையிலான சஃபாரி ஜீப்புகள் இயக்கப்படுவது வனவிலங்கு அதிகாரிகளின் பணிக்குச் சிரமங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.