உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமைக்கு எதிராக FR மனுத் தாக்கல்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
114 பார்வைகள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் துலார குணதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி துலார குணதிலக்க என்ற மனுதாரரால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்த மனு விசாரணைக்காகத் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவே இல்லை என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தைச் சபாநாயகருக்கு அறிவிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி கௌரவிப்பு

கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலய மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி ரவிகரன் விஸ்வாதியா பாராட்டி…

129 0 0
இலங்கை செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்குமாறு நாமல் கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம்…

137 0 0
இலங்கை செய்திகள்

ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் இரு பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய,…

141 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்…

77 0 0