உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போ*தைப்பொருள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
71 பார்வைகள்

கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளியை செலுத்தி சென்றவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களின் பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அதிலிருந்து 350 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் மேலதிக சிகிச்சைகளுக்காகக் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மீளப் பெறப்பட்ட யோஷிதவின் மேன்முறையீட்டு மனு.!

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

68 0 0
இலங்கை செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது.!

அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின்…

64 0 0
இலங்கை செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா; சில பாடசாலைகளுக்கு விடுமுறை.!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

60 0 0
இலங்கை செய்திகள்

புனித தோமையார் வாசாப்பு நாடகம்.!

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டி ஆலய சபை மற்றும் கிராம மக்கள் இணைந்து வழங்கிய ‘புனித தோமையார் வாசாப்பு’ நாடகம் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (6)…

70 0 0