உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நாமலுக்கு வீட்டுணவிற்கு அனுமதி.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
106 பார்வைகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுரனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் செனக பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இலஞ்சம் பெறப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிடடது.

இதற்கமைய, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டுக்கு அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தினசரி மூன்று நபர்கள் அவரைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், நாமல் ராஜபக்ஷவின் தாயாரான சிரந்தி ராஜபக்ஷ இன்று (07) முற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று நாமல் ராஜபக்ஷவின் நலன் தொடர்பில் விசாரித்ததாக நமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் இன்று முற்பகல் நாமல் ராஜபக்ஷவைப் பார்வையிடுவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போ*தைப்பொருள்.!

கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளியை செலுத்தி சென்றவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் தம்பதெனிய…

69 0 0
இலங்கை செய்திகள்

புனித தோமையார் வாசாப்பு நாடகம்.!

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டி ஆலய சபை மற்றும் கிராம மக்கள் இணைந்து வழங்கிய ‘புனித தோமையார் வாசாப்பு’ நாடகம் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (6)…

69 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சி.!

மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலேவெல, சிகிரியா போன்ற பகுதிகளிலும், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் தற்போது உள்ளூர் பெரிய வெங்காய அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

69 0 0
இலங்கை செய்திகள்

நீதியை விரைந்து வழங்கவே அரசமைப்புத் திருத்தங்கள்.!

நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை வழங்குவதற்காகவே அரசமைப்புத் திருத்தங்களை முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுத்து…

91 0 0