மாமுனை தம்பகாமம் அபாய வெளியேற்ற பாதையை பார்வையிட்ட ரஜீவன் எம்.பி.!
வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாமுனையிலிருந்து தம்பகாமம் ஊடக பளைக்கு செல்கின்ற வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாது காணப்படுவதால் சுனாமி போன்ற அவசர நிலைமைகளில் வெளியேறுவதற்கு பல்வேறு நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதாலும், மாமுனையிலிருந்து பளைக்கு செல்வதற்கு 7 km தூரமாக உள்ள நிலையில் மாற்றுப் பாதையை பயன்படுத்தி மருதங்கேணி, புதுக்காடு ஊடக பளைக்கு செல்வதற்கு 22 km தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது.
இந் நிலையில் நேற்று இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த வீதியை திருத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் குறித்த வீதியை நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி குறித்த வீதியை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன்பின் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி,
குறித்த வீதி மிக விரைவில் சீரமைத்து தரப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினருடன் வடமராட்சி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சாம், மாமுனை கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் சென்றிருந்தனர்.

