உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

பெண்ணொருவர் கொ*லை; சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
48 பார்வைகள்

கற்பிட்டி, பால குடாவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (03) கர்ப்பிணிப் பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொ*லை செய்யப்பட்டுள்ளார்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்த பெண், கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பால குடாவ, கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் தனது கணவரைப் பிரிந்து வேறொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றிய நிலையில், குறிப்பிட்ட நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய நபர் கைது.!

பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் சந்தேகநபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு கைது செய்துள்ளது.…

42 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது.!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்…

56 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; இருவர் வைத்தியசாலையில் அனுமதி.!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இன்று வௌ்ளிக்கிழமை (04) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

58 0 0
இலங்கை செய்திகள்

ரயிலில் மோதி ஒருவர் உ*யிரிழப்பு.!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை சீனங்குடா ரயில் நிலையத்திற்கும் திருகோணமலை ரயில்…

45 0 0