உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

காணாமல்போனோர் அலுவலகப் பணிகள் தொடர்பில் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நீதி அமைச்சருடன் பேச்சு.!

இலங்கை செய்திகள் 57 நிமிடங்கள் முன்
52 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச்சுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிகள் என்பன உள்ளடங்கலாக சட்ட ஆட்சி சார்ந்த மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்டோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

160 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை காவல்துறைக்கு பிரிடோ நிறுவனம் வாழ்த்து.!

இலங்கையில் காவல்துறை சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பையும் சட்டம் மற்றும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும்…

33 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை…

49 0 0
இலங்கை செய்திகள்

நாமல் தான் செய்த தவறை நன்கு அறிவார்; அவர் அச்சமடைவதில் ஆச்சரியமே இல்லை.!

“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தான் என்ன செய்தார் என்பதை நன்கு அறிந்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அல்லது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு…

38 0 0
இலங்கை செய்திகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம்.!

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்கள் ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ள நிலையில் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மேய்ச்சல் தரைப்…

29 0 0