உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

செயற்கை நுண்ணறிவுக்குத் தடை

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
30 பார்வைகள்

அமெரிக்காவின் மிகப்பெரிய பாடசாலைகள் அமைந்துள்ள நியூயோர்க் நகரில் பொதுப் பாடசாலைகளில் பயிலும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுவாக 13 அல்லது 14 வயதுடையவர்கள் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.

இந்தத் தடை அடுத்த வாரம் அமுலுக்கு வருகிறது.

மாணவர்களின் கல்வியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது அறிவாற்றல் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்டும் பல அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது.

சுமார் 900,000 மாணவர்களைக் கொண்டுள்ள நியூயோர்க்கின் தொழில்நுட்பப் பயன்பாட்டில் செய்யப்படவுள்ள பெரும் மாற்றத்தின் ஒரு பகுதியாக அது கருதப்படுகிறது.

இதன்படி, மூன்றாம் வகுப்பு வரை 9 அல்லது 10 வயது வகுப்பறைகளில் மாணவர்கள் மடிக்கணினிகள் அல்லது டேப்லெட்டுகளைப் பயன்படுத்துவது தடுத்து நிறுத்தப்படும்.

அதேநேரம் 9 ஆம் வகுப்பில் ஆரம்பமாகும் உயர்நிலைப் பhடசாலைகளில் மாத்திரமே செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அனுமதிக்கப்படும்.

அதிலும் கூட தொழில்நுட்பம் குறித்தே கற்றுக்கொள்வது போன்ற குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே அது வரம்பிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

ஆசிரியர்கள் பாடங்களைத் தயாரிப்பது அல்லது செய்திகளை எழுதுவது போன்ற பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மாணவர்களின் பணிகளை மதிப்பிடுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காசா மக்களை வெளியேற்றும் திட்டம்

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் முன்வைத்துள்ளார். முதல் ஆண்டில் 2.5 லட்சம் பேரும், அடுத்த…

35 0 0
உலக செய்திகள்

 EOS-05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவல்

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்த GSLV-F17 ராக்கெட் இன்று (04) அதிகாலை 2.55 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில்…

54 0 0
உலக செய்திகள்

பில் செலுத்தவில்லை; இளம் பெண்ணுக்கு மொட்டை!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் சுமார் 60,000 தாய் பாட் கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முயன்றதாகக் கூறப்படும் 18 வயது இளம் பெண்ணுக்கு…

73 0 0
உலக செய்திகள்

16 நாட்கள் விண்வெளியில் உணவின்றி உயிர் வாழ்ந்த பல்லிகள்

விண்வெளியில் புவிஈர்ப்பு விசையற்ற சூழல் உயிரினங்களின் உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்வதற்காக, கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய அறிவியல் அகாடமி இணைந்து மேற்கொண்ட…

76 0 0