உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
29 பார்வைகள்

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்கள் ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ள நிலையில் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மேய்ச்சல் தரைப் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் நேற்றைய தினம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் ஏறாவூர்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமை இக் கூட்டம் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் அரச மற்றும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கல்வி, சுகாதாரம், வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.

அத்துடன் குறிப்பாக ஏறாவூர்பற்று பிரதேச எல்லைக்குள் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக ஆராயப்பட்டதுடன், ஏறாவூர் நகர சபையால் கொட்டப்படும் குப்பை மற்றும் விலங்கு கழிவுகளால் மக்கள் பாதிப்படைகிற விடயம் தொடர்பாகவும் மற்றும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக எதிர்வரும் மாரி காலத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கஷ்டப் பிரதேசங்களுக்குச் செல்லும் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை சீரமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

160 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை காவல்துறைக்கு பிரிடோ நிறுவனம் வாழ்த்து.!

இலங்கையில் காவல்துறை சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பையும் சட்டம் மற்றும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும்…

33 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை…

49 0 0
இலங்கை செய்திகள்

நாமல் தான் செய்த தவறை நன்கு அறிவார்; அவர் அச்சமடைவதில் ஆச்சரியமே இல்லை.!

“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தான் என்ன செய்தார் என்பதை நன்கு அறிந்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அல்லது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு…

38 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போனோர் அலுவலகப் பணிகள் தொடர்பில் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நீதி அமைச்சருடன் பேச்சு.!

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச், நீதி அமைச்சர்…

51 0 0