உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

‘குடு சலிந்து’ வழக்குக் கோப்புகள் மாயம் – 10 பேரிடம் விசாரணை

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
73 பார்வைகள்


‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த இரண்டு முக்கிய வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் 10 நீதிமன்ற ஊழியர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7 பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

காணாமல் போன கோப்புகளில், குடு சலிந்துவின் வழிநடத்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதப் படுகொலை தொடர்பான வழக்கும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கோப்பும் அடங்குகின்றன.

கடந்த 28ஆம் திகதி வழக்கிற்கான அறிக்கையைத் தேடியபோது அது கிடைக்காததால், உப கோப்பின் மூலம் 31ஆம் திகதி மீண்டும் வழக்கை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே பிரதான கோப்புகள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டது.

ஆவணங்களின் பிரதிகளைப் பெறுவதற்காக அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோப்புகள் காணாமல் போயுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்து, கோப்புகள் எவ்வாறு காணாமல் போயின என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

132 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

115 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

112 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

120 0 0