உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவு விழா.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
94 பார்வைகள்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று பெரியகல்லாறு மெதடிஸ்த சமூக மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவி அருட்சகோதரி தயாளினி ஜோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் யு. உதயசிறீதர் அவர்கள் பிரதான விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஆன்மீக அதிதிகளாக கல்லாறு மெதடிஸ்த சேகர முகாமைக்குரு அருட்திரு. செ. திருமறைதாசன், கல்முனை மெதடிஸ்த சேகரத்தைச் சேர்ந்த அருட்செல்வி. அ. சுலோஜினி மற்றும் கோடைமேடு சிவஶ்ரீ. க. வடிவேல் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்கினர்.

இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையினை எஸ்.கியு.எம்.பவுன்டேசன் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திருமதி தருணி சிவகுமார் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

விழாவில் பல்வேறு தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் பணியாளர்கள், ஆசிரியர்கள், பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்கள், தற்போதைய பயிற்சியாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

36 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0