காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொண்ட 50 பேருக்கான பூர்வாங்க விசாரணை.!
கிளிநொச்சி காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் மேலும் பதிவுகளை மேற்கொண்ட 50 பேருக்கான பூர்வாங்க விசாரணை கிளிநொச்சி மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இன்று 18.08.2026 இடம்பெற்றது.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினரான மிஷேக் ரஹீம் தலைமையில் குறித்த விசாரணைகள் இன்று நடைபெற்றது. இதன் போது 50 பேருக்கான பூர்வாங்க விசாரணை முன்னெடுக்கப்பட்டது.


