உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வட்டவளை மீனாட்சி தோட்டம் முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூரம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
147 பார்வைகள்

வட்டவளை மீனாட்சி தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் மிகவும் கோலாகலமாக நேற்று (14) இடம்பெற்றது .

நேற்றைய தினம் காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அம்பாளுக்கு பாலாபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் இடம்பெற்றது.

தொடர்ந்து அடியார்கள் ஒன்று திரண்டு அம்மனுக்கான சீர்வரிசை பொருட்களை வெளிவீதி உலாவாக வலம் கொண்டு வந்து பின்னர் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.

மாபெரும் ஆடிப்பூர பூஜையின் பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த கிரியைகள் யாவும் வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த சுரேஷ் ஷர்மா தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டதும் அம்பாளுக்கு வளையல்கள் அலங்கரிக்கப்பட்டதும் விசேட அம்சமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

71 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

57 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0