உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
89 பார்வைகள்

இலங்கையின் வடக்கு, கிழக்கில் அரச தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்ற மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார் .

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (14) காலை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக மட்டக்களப்பு மக்கள், மயிலத்தமடு மாதவனை மக்கள் தங்களுடைய மேய்ச்சல் தரைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கடந்த வெள்ளிக்கிழமை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.

​அதே போல, வலிவடக்கு யாழ்ப்பாணத்திலும் தங்களுடைய காணிக்காக போராடிக் கொண்டிருக்கின்ற மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்டது.

​அதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த காணிக்காக அவர்களுடைய போராட்டத்தினுடைய நியாயத்தன்மைக்கும், அவர்களுடைய நீதியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

​ஆகவே, இந்த போராட்டமானது தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்ற எங்களுடைய மட்டக்களப்பு மக்களாக இருக்கலாம், மயிலத்தமடு மாதவனை மக்களாக இருக்கலாம், வலிவடக்கு யாழ்ப்பாண மக்களாக இருக்கலாம், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களாக இருக்கலாம்.

இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக காணி இழந்த மக்கள் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் அரச தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்ற மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிந்தார்.

இதற்கு மெசிடோ (MESDO) நிறுவனம் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0