உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்திய உரிமையாளர்களுக்கு தண்டப்பணம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
94 பார்வைகள்

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நீண்டகாலமாக ‘வாகனம் நிறுத்தத் தடை’ (No Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்கள் முறையற்ற விதத்தில் நிறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கு எதிராக போக்குவரத்து பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்திய வாகன உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக போக்குவரத்து ஒழுங்கை பேணுவதற்கும், நோயாளர்களின் அவசரப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்து பொலிஸாரின் அறிவுறுத்தல்களையும் வீதிப் போக்குவரத்து விதிகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

28 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0