உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற ஆடி அமாவாசை பூஜை.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
93 பார்வைகள்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (12) காலை ஆடி அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை வசந்த மண்டபத்தில் கௌரியுடை திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து சுவாமி உள் வீதி எழுந்தருளி பாலாவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாட சென்றார். பாலாவி தீர்த்தம் இடம்பெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலா வந்தார்.

அதனை தொடர்ந்து பாலாவி தீர்த்த கரையில் இறந்த முன்னோரை நினைவு கூர்ந்து எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை செய்து, மோட்ச விளக்கு ஏற்றி பக்த அடியார்கள் இறந்த தமது முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

35 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

26 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

24 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் படு கொ*லைக்கு சர்வதேச விசாரணையே தீர்வு.!

“தமிழினப் படு கொலைக்கு கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது…

43 0 0