சீரற்ற காலநிலை; நுவரெலியாவில் 2,112 குடும்பங்கள் பாதிப்பு.!
நேற்று பிற்பகல் (06) நிலவரப்படி, நுவரெலியா மாவட்டத்தில் 2112 குடும்பங்களைச் சேர்ந்த 8191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 06 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கூன் தெரிவித்தார்.
இதன் விளைவாக, 152 குடும்பங்களைச் சேர்ந்த 504 நபர்கள் இன்னும் 18 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
11 வீடுகள் முழுமையாகவும், 246 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இந்த பேரிடரால் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.