உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

லொத்தர் விற்பனை முகவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவிகளுக்கு லொத்தர் சபை நிதியுதவி.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
67 பார்வைகள்

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை முகவர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் கல்வி உதவித்திட்டத்திற்கு தேசிய லொத்தர் சபையினால் நேற்று நிதியுதவி வழங்கப்பட்டது.

இதற்குரிய காசோலையை தேசிய லொத்தர் சபையின் தலைவர் எம். டி. சிரில் அண்டன் பெரேரா, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகேவிடம் கையளித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அங்கீகாரத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் ஓகஸ்ட் 23ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.

லொத்தர் விற்பனையின் மூலம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டும் வகையில்,லொத்தர் விற்பனை முகவர்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஏற்கனவே சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

51 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

51 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

59 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

56 0 0