உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நேரடியாகப் பங்களிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
44 பார்வைகள்

புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்கவும் மேம்படுத்தவும், தேசிய பொருளாதாரத்தை உயர்த்தவும் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளை உருவாக்க உதவியதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலமே மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதம் மாறுகிறது என்றும் அதனைச் சரியாக அடையாளம் காண்பவர்களே எதிர்கால உலகை வெல்ல முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு – செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் தேவையான தகவல்கள் மற்றும் தரவுகளை வழங்குவதற்கான முறைமையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமைச்சரவை மட்டத்தில் ஏற்கனவே இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

வெவ்வேறு அமைச்சுக்களின் கீழ் உள்ள ஆராய்ச்சிப் பிரிவுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்கும்போது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் விசேட பிரிவு ஒன்றை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள 14 நிறுவனங்களால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் யானை வேலி அமைத்தல் மற்றும் குறைந்த செலவிலான சுற்றாடல் நேய கட்டிடங்களை அமைத்தல் போன்ற ஆராய்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை போன்ற நிறுவனங்களால் வழங்கப்படக்கூடிய பங்களிப்பும் ஆராயப்பட்டது. விவசாய அமைச்சு போன்ற பல்வேறு அமைச்சுக்களின் கீழ் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பாடலுடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் கறுவா சார்ந்த தயாரிப்புகள் குறித்த ஆராய்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டதோடு ஆயுர்வேத தயாரிப்புகள் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் தடைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய விஞ்ஞான மன்றத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்போது கொள்முதல் செயல்முறை தொடர்பான சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய விஞ்ஞான ஆணைக்குழு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சிற்கு பொருத்தமான ஒரு கொள்கையை தயாரித்து சமர்ப்பித்துள்ளதாகவும், புலமைச் சொத்து தொடர்பான கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

அனர்த்தங்களுக்கு முன்கூட்டியே தயாராவதற்கான விஞ்ஞானபூர்வமான வரைபடம் வரும் ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளதாகவும், பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையில் தொழில்நுட்பப் பரிமாற்றத் திட்டம் ஒன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

காட்டு யானைகள் ரயிலில் மோதுவதைத் தடுப்பதற்காக ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ள வெப்ப உணர் கெமரா கட்டமைப்பை பொருத்தும் திட்டம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

51 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

51 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

59 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

56 0 0