உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
48 பார்வைகள்

தெமட்டகொடை – குப்பியாவத்தை பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

2026 ஜூலை 23 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

இது குறித்து பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (05) லேக் டிரைவ் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 10 கிராம் 900 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட நபர் பொரளை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இச் சந்தேகநபருடன் இருந்த பொரளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றொரு நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கும் இக்குற்றச் செயலில் தொடர்புள்ளதா என்பது குறித்து பொரளை பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

55 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0