உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களை சந்தித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
44 பார்வைகள்

கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கை மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், மக்கள் நலனை மையமாகக் கொண்ட சமூகம் சார்ந்த நடவடிக்கைகளையும் தொடர்ந்து வலுப்படுத்துவது தொடர்பாகவும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பு, பரஸ்பரம் இந்தியா – இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முன்னெடுப்பின் ஓர் அம்சமாக அமைந்திருந்தது.

இதன்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் உடனிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

55 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0