உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அருகம்பே – சாவாலை வீதியில் நள்ளிரவில் காட்டு யானையின் அச்சுறுத்தல்!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
97 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதிப் பகுதிக்குள் நேற்று  செவ்வாய்க்கிழமை (04.08.2026) இரவு 10.30 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காட்டு யானையொன்று புகுந்தமையால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.

கிராமத்திற்குள் புகுந்து மக்கள் நடமாடும் வீதிகளில் சுற்றித்திரிந்த இக் காட்டு யானையைக் கண்ட பிரதேச வாசிகள் பீதியடைந்ததுடன், ஊரார் ஒன்றுதிரண்டு அதனை ஊரை விட்டு வெளியேற்ற முயன்றனர்.

இதன்போது ஆத்திரமடைந்த காட்டு யானை, மக்களை நோக்கிப் பாய்ந்து துரத்த முற்பட்டதால் பொதுமக்கள் நாலாப்பக்கமும் சிதறியோடினர்.

இருப்பினும், அதிர்ஷ்டவசமாகப் பெரிய அளவிலான உயிர்ச் சேதங்களோ அல்லது வீடுகளுக்கான உடைமைச் சேதங்களோ எதுவுமின்றி யானை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் பகுதிக்குத் திரும்பிச் சென்றுள்ளது.

இச் சம்பவத்தின் போது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மிகவும் துணிச்சலுடனும் பொறுப்புடனும் செயற்பட்டு, காட்டு யானைக்கு எவ்வித ஆபத்தும் அல்லது காயங்களும் ஏற்பட்டு விடாத வகையில் அதனை மிகச் பாதுகாப்பான முறையில் காட்டுப் பகுதிக்குள் விரட்டியடிக்க உதவினர்.

அருகம்பே மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதனால், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

55 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0